கடல் கடந்து வந்து உழைக்கும் அமீரக மக்களுக்காக, 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் ஒலிக்க செய்யும் அமீரகத்தின் பிரபல தமிழ் வானொலியான உம் அல் குவைன் பிராட்கேஸ்டிங் நெட்வொர்க்கின்(Umm al Quwainn Broadcasting Network, UBN) ரேடியோ கில்லி 106.5 பண்பலை 3 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. உலக வானொலி வரலாற்றில், புதுமை படைக்கும் வண்ணம்,ரேடியோ கில்லி தமது 2 ஆவது வருட துவக்கத்தை, 106 மணி நேரங்கள் மற்றும் 50 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலை நிகழ்ச்சிகளை ஆர்ஜே நிவி மற்றும் ஆர்ஜே பிரதீப் இணைந்து தொகுத்து வழங்கி கின்னஸ் உலக சாதனை படைத்ததன் ஒரு வருட நிறைவு விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது,