×
Saravana Stores

ஷேக் ஹசீனா ராஜினாமா விவகாரம்; வங்கதேச அதிபருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த ஆக.5ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கு தப்பிவந்தார். இதை ெதாடர்ந்து நோபல் பரிசு பெற்ற 84 வயதான முகமது யூனுஸ் வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரானார். வங்கதேசத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

ஆனால் அதற்கான ஆவணம் தன்னிடம் இல்லை என்று நேற்றுமுன்தினம் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்தார். இதை கண்டித்து நேற்று மாணவர் அமைப்பினர் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலகக் கோரி தலைநகர் டாக்காவில் உள்ள சென்ட்ரல் ஷஹீத் மினார் முன் ஏராளமா னவர்கள் திரண்டனர்.

The post ஷேக் ஹசீனா ராஜினாமா விவகாரம்; வங்கதேச அதிபருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: பதவியில் இருந்து விலக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sheikh Hasina ,Dhaka ,India ,Bangladesh ,Muhammad Yunus ,President ,Dinakaran ,
× RELATED சபரிமலை வரும் பக்தர்களுக்கு 6 இடங்களில் உடனடி முன்பதிவு வசதி