×
Saravana Stores

எஸ்.ஏ.கலை அறிவியல் கல்லூரியில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளம் வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா ஆலோசனையின் பேரில் காவலன் மொபைல் செயலி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில், துணை ஆய்வாளர் கவிதா, தலைமைக் காவலர் விஜயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு காவலன் செயலி குறித்து பேசினர்.

இந்த காவலன் செயலி பணியிடங்களில், வீடுகளில், சுற்றுப்புறங்களில், சமூக ஊடகங்களில் பெண்கள் துன்புறுத்தப்படும்போது, அது பற்றி புகாரளிக்கவும், மேலும் இந்திய சட்டத்தின் கீழ் கிடைக்கும் தொடர்புடைய முற்போக்கான சட்டச் செயல்முறைகளையும் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சா சட்டம், சுரண்டல் போன்ற துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாப்பதில் எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குகிறது. பாதுகாப்பான வாழ்க்கையை வாழவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

The post எஸ்.ஏ.கலை அறிவியல் கல்லூரியில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : S.A. College of Arts and Sciences ,Tiruvallur ,Young Commerce Department of Computer Applications ,Inner Wheel Club ,S.A. Arts and Science College ,Thiruvekkath ,P.Venkatesh Raja.… ,
× RELATED பராமரிப்பின்றி பாசிபடர்ந்த கோயில் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை