அஜித் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்

சென்னை: அஜித் குமார் நண்பரும், தயாரிப்பாளருமான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி (58), அஜித் குமார் நடித்த ‘ராசி’, ‘வாலி’, ‘முகவரி’, ‘சிட்டிசன்’, ‘ரெட்’, ‘வில்லன்’, ‘ஆஞ்சநேயா’, ‘ஜி’, ‘வரலாறு’ ஆகிய 9 படங்களை தயாரித்தார். பிறகு விக்ரம் நடித்த ‘காதல் சடுகுடு’, சிம்பு நடித்த ‘காளை’, ‘வாலு’ ஆகிய படங்களை தயாரித்தார். பிறகு ’விலங்கு’ என்ற வெப்தொடரில் போலீஸ் வேடத்தில் நடித்தார்.

தனது மகன் ஜானி நடிப்பில் ‘ரேனிகுண்டா’, ‘18 வயசு’ ஆகிய படங்களை தயாரித்தார். பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த எஸ்.எஸ்.சக்ரவர்த்தி, 8 மாதங்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மரணம் அடைந்தார். எஸ்.எஸ்.சக்ரவரத்தியின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

The post அஜித் பட தயாரிப்பாளர் திடீர் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: