வெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது

துபாய்: தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரவிசந்திரன் தற்போது ஐக்கிய அரபு எம்ரேட்சின் தலைநகரான‌ அபுதாபியில் பல்கலைகழகத்தில் இணை பேராசிர்யாராக பணியாற்றி வருகிறார். இவர் ஆசிரிய பணியோடு சர்வதேச அளவில் உலக மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.  இவர் சமீபத்தில் 3 ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களை ஐநாவின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நடத்திய போட்டியில் சமர்பித்திருந்தார்.

இத்திட்டம் மக்களிடம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு இவரின் இரண்டு திட்டங்கள்  சிறந்த திட்டங்களாக  தேர்வு செய்யப்பட்டது.  இதற்கான விருது ஐநாவின் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் சார்பில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய‌  world summit on information society (WSIS 2019 ). உலக உச்சி மாநாட்டின் போது ரவிசந்திரனுக்கு வழங்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஆராய்ச்சி திட்டங்களில் சென்னையின் கல்வி நிறுவனத்தின் மூலம்  நிலையான‌ கல்வி என்ற கட்டுரையும் மற்றும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக‌ தொழில் முனைவோர்  வளர்சிக்கும் , கிராமப்புற பெண்களின் தொழில் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் உருவாக்கப்பட்ட கட்டுரையும் ஆகிய இரண்டு கட்டுரைகளும் விருதுக்கு தேர்வு செய்யப்ப்பட்டது.இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பட்டபடிப்பு முடித்து சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சர்வதேச அளவில் விருது பெற்றுள்ளமைக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : United Nations ,Foreign Living Tamils ,
× RELATED ன்றியக்குழு கூட்டத்தில் தகவல்...