படத்துக்காக பிரியாணியை தியாகம் செய்தேன்: மாளவிகா மோகனன்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’, தனுஷ் நடித்த ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்கவயல் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் பசுபதி, பார்வதி, பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தில் ஏற்றுள்ள கேரக்டருக்காக தனது உடல் எடையைக் கணிசமாக குறைத்துள்ள மாளவிகா மோகனன் கூறுகையில், ‘இப்படத்தில் எனக்கு மிகச்சிறப்பான கேரக்டர் கிடைத்துள்ளது.

இந்த கேரக்டருக்காக ஒல்லியான, இறுக்கமான உடலமைப்பை இயக்குனர் விரும்பினார். இதனால் எனக்குப் பிடித்த பிரியாணியை தியாகம் செய்துவிட்டு, தினந்தோறும் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்தேன். எனது கேரக்டருக்கான படப்பிடிப்பு முடிந்ததும், மீண்டும் எனக்குப் பிடித்த உணவுகளை தொடர்வேன். கேரக்டருக்காக நிறைய விஷயங்களில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்றார்.

The post படத்துக்காக பிரியாணியை தியாகம் செய்தேன்: மாளவிகா மோகனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: