×
Saravana Stores

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்: ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை

தூத்துக்குடி: ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடிப்பு துறைமுகத்தில் இருந்து விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆனால் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் சரிவர கிடப்பது இல்லை என்றும் தொழிலில் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற மாவட்டங்களில் உள்ளது போல் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களையும் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் அழைப்பை விடுத்துள்ள போராட்டத்தால் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் விசை படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். 5000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

The post தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்: ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Toutukudi ,Sea ,Tuthukudi ,Tuthukudi Keyboat Fishing Port ,Dinakaran ,
× RELATED கள்ளக்கடல் எச்சரிக்கை:...