×

மூன்றரை வருட இடைவெளிக்கு பிறகு ரிலீசாகும் சித்தார்த் படம்

சென்னை: கடந்த 2003ல் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த், இப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். முன்னதாக அவர், மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் அவர் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்த அவர், தயாரிப்பாளராக மாறி ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்.ஜங்.ஜக்’, ‘அவள்’ ஆகிய படங்களை தயாரித்தார். சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதினார். பல படங்களில் பின்னணி பாடினார். தற்போது ‘இந்தியன் 2’, ‘டக்கர்’, ‘சித்தா’, ‘டெஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘டக்கர்’ படத்தை கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ளார். ஏற்கனவே அவரது இயக்கத்தில் ‘கப்பல்’ என்ற படம் திரைக்கு வந்துள்ளது. காதலுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தில், சித்தார்த் ஜோடியாக திவ்யான்ஷா கவுசிக் நடித்துள்ளார். மற்றும் யோகி பாபு, அபிமன்யுசிங், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். அடுத்த தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வரும் மே 26ம் ேததி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்துள்ளனர். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். தமிழில் 2019ல் வெளியான ‘அருவம்’ என்ற படத்தில் சித்தார்த் நடித்திருந்தார். மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ‘டக்கர்’ படம் வெளியாகிறது.

The post மூன்றரை வருட இடைவெளிக்கு பிறகு ரிலீசாகும் சித்தார்த் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Siddharth ,Shankar ,Maniratnam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்...