×
Saravana Stores

காலிஸ்தான் பிரிவினைவாதியை கொல்ல சதி பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

நியூயார்க்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பன்னூனை கொல்ல சதி நடந்தது. இதில், இந்திய தொழிலதிபர் நிகில் குப்தா என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்து, செக் குடியரசில் இருந்து நாடு கடத்தி அழைத்து வந்தனர்.

இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்தியாவின் ரா பிரிவில் பணியாற்றும் விகாஸ் யாதவ் இந்த கொலை முயற்சியில் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறி அவர் துணை சதிகாரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற வளாகத்தில் கூடிய சீக்கிய அமைப்பினர் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடியின் உருவப் படத்தை அடித்தனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிக சிறை அறைக்குள் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காலிஸ்தான் பிரிவினைவாதியை கொல்ல சதி பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : US ,Modi ,Khalistan ,New York ,United States ,Bannoon ,Nikhil Gupta ,
× RELATED சீக்கிய பிரிவினைவாத தலைவரை கொல்ல சதி...