×
Saravana Stores

போரால் நிலைகுலையும் லெபனான்: மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

டெல்லி: லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வந்த போதிலும், மனிதாபிமான அடிப்படையில் மருந்து பொருட்களை இந்தியா லெபனானுக்கு அனுப்பி வைத்தது. இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இந்த போர் ஓராண்டை கடந்து நடந்து வரும் நிலையில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக, லெபனானில் இருந்து இதுவரை சுமாா் 2 லட்சம் போ் இட்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 2,000 க்கும் மேற்பட்டோர் போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில் லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 11 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருப்பதாவது, மொத்தம் 33 டன் மருத்துவப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகள், நோய் எதிர்ப்பு மருத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அதில் அடங்கும். முதல் கட்டமாக 11 டன் மருத்துவப் பொருள்கள் இன்று அனுப்பப்பட்டன. இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

The post போரால் நிலைகுலையும் லெபனான்: மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா appeared first on Dinakaran.

Tags : Lebanon ,India ,Delhi ,Hezbollah ,Hamas ,Israel ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும்...