×

தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பலன் பெறுவார்கள். ஒன்றிய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 60%, மாநில அரசு 40% நிதி வழங்குகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்கு ரூ. 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ. 83 கோடி என மொத்தம் ரூ. 209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2024 – 2025ம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Government ,Tamil Nadu ,Chennai ,Union Government ,Narendra Modi ,
× RELATED 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக...