×

தீபாவளி அன்று புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..!!

புதுச்சேரி: தீபாவளி அன்று புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், வழிப்பாட்டு தலங்கள், கல்வி கூடங்கள், நீதிமன்ற சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி அன்று புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Diwali ,
× RELATED புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை...