×

படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் உணவு வழங்க மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முன்னோட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த ஒத்திகையை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். இந்த பணிகளுக்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 டிரோன்கள் தயார் நிலையில் இருந்தன. இதன் மூலமாக பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும். இவை 40மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும் சக்தி உடையது. ஆய்வின்போது துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) ஜெயசந்திரபானு ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் டிரோன்கள் மூலம் உணவு வழங்க மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Minister ,KN Nehru ,Ripon Building Complex ,Garuda ,Kothari ,Drago ,
× RELATED பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால்...