×

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டம் : அமைச்சர் நேரு ஆய்வு!!

சென்னை : நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் பார்லையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா. கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ட்ரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த ட்ரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, மேயர் திருமதி ஆர்.பிரியாட மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார். ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன். இ.ஆ.ப.கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி. இ.ஆ.. துணை ஆணையாளர்கள் திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப. (பணிகள்). திரு.எம்.பிருதிவிராஜ். இ.ஆ.ப. (வருவாய் (ம) நிதி) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டம் : அமைச்சர் நேரு ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Minister of Municipal Administration ,Shri. K. N. Nehru ,Greater Chennai ,Nehru ,
× RELATED வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு...