×

40% பேச்சு குறைபாடு உள்ளவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: பேச்சு மற்றும் மொழி குறைபாடு உள்ளவர்களை எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேர்ப்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், 40 முதல் 45 சதவீதம் வரையில் பேச்சுத்திறன் மற்றும் மொழி குறைபாடு கொண்டவர்களை எம்பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது.

இருப்பினும் இந்த விவகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்றவர்களின் விண்ணப்பத்தை தகுதி நீக்கம் செய்யக் கூடாது. மாநில கொள்கையின் கீழ் இதனை அங்கீகரிக்க வேண்டும். அடிப்படை இயலாமையை கருத்தில் கொள்வது என்பது, ஊனமுற்றோர் மதிப்பீட்டு வாரியத்தால் அத்தகைய விண்ணப்பத்தாரர்களை சேர்க்கும் வழியில் வராது. மேலும் இயலாமையை கணக்கிடுவது இவர்களுக்கான மருத்துவ சேர்க்கை பெறுவதை தடுக்காது என்று தீர்ப்பளித்தனர்.

The post 40% பேச்சு குறைபாடு உள்ளவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Justices ,PR Kawai ,KV Viswanathan ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து...