×

கனமழை முன்னெச்சரிக்கை.. சென்னைக்கு உதவ தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை: சென்னைக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

*சென்னையில் சராசரியாக 4.6 செமீ மழை பதிவாகியுள்ளது.

*சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.

*பலத்த காற்று வீசியதால் சென்னையில் 8 மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது வரை ஒரு மரம் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும்.

*சென்னையில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 1000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*நிவாரண மையங்களில், தண்ணீர், பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.

*கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர சென்னையில் உள்ள 20 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. மழை நின்றவுடன் இவ்விரு சுரங்கப்பாதைகளும் சரிசெய்யப்படும்.

*300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எங்கும் மின் தடை ஏற்படவில்லை.

*கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

*சென்னையில் 89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

*சென்னையில் 13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் தயாராக உள்ளனர்.

*சென்னையில் அதிகபட்சமாக 1000 பேர் தங்கக்கூடிய வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post கனமழை முன்னெச்சரிக்கை.. சென்னைக்கு உதவ தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Integrated Control Center ,Chennai Ribbon House ,Udhayanidhi Stalin ,
× RELATED கால்களாவது சுத்தமாகட்டும் அழுக்கேறிய...