×

கர்நாடக மாநிலத்தில் 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சூரிய சக்தி மின்சார வசதி செய்து கொடுப்பது தொடர்பாக செல்கோ மற்றும் ரொட்டரி கிளப் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகதார நிலையங்களில் 24 மணி நேரமும் சீரான மின்சார வசதி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்கோ நிறுவனம் மற்றும் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து சோலார் மின் வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்தது.

இது தொடர்பாக மாநில அரசின் சுகாதார துறை மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் முதல் கட்டமாக 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் மின் வசதி செய்யப்படுகிறது. செல்கோ மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து வரும் 2026 இறுதிக்குள் கர்நாடக மாநிலம் உள்பட நாட்டில் 12 மாநிலங்களில் இயங்கி வரும் 25,000 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கர்நாடக மாநிலத்தில் 1,150 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவ்வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

கர்நாடகாவில் ஆரம்ப சுகாதார சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த, இந்த முயற்சியானது பொது சுகாதார மையங்களை வலுவான, நிலையான எரிசக்தி உள்கட்டமைப்புடன் முதன்மை சுகாதார சேவைகளின் தரம், அணுகல் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணித்தல் மற்றும் மீள்வழங்கும் சுகாதார அமைப்பை வளர்ப்பது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் நிலையான ஆற்றல் தலையீடுகளை அளவிடுவதற்கு ஒரு பிரதி மாதிரியை உருவாக்க முயல்கிறது, இறுதியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார விளைவுகளுக்கு பங்களிக்கிறது, குறைக்கப்பட்ட ஆற்றல் செலவினங்கள் மற்றும் ஆரோக்கியமான, மிகவும் சமமான சமுதாயத்திற்கு பங்களிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கர்நாடக மாநிலத்தில் 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Selco ,Rotary Club ,Karnataka state government ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலம் பெல்லாரியில்...