அபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு

துபாய். அமீரக திமுக சார்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு வருகை தந்துள்ளார். அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலச்சார மையதிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுடன் நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே எஸ் விஜயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Advertising
Advertising

அப்போது அமீரக தமிழ் மக்கள் மன்றத்தில் சார்பாக தலைவர் சிவக்குமார் அவர்கள் தமிழ்ர் நல வாரியம் அமைப்பதற்கான அவசியம் குறித்து விவரத்தை கூறிய போது அருகில் பொதுச் செயலாளர் அ.பிர்தோஸ் பாஷா மற்றும் துணைத்தலைவர் நீலகண்டன் அவர்களும், மரியாதை கூறிய சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கு இந்திய சமூக மற்றும் மையத்தில் சார்பாக அதனுடைய தற்போதைய தலைவர் ராமேஷ் பனீக்கர் பொன்னாடை போர்த்தி கவரபடுத்தினார்கள். அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மன்றத்தில் சார்பாக அதனுடைய துணைத் தலைவர் திரு. பழனி மற்றும் பொருளாளர் சோலை அவர்களும் பொன்னாடை போர்த்தி கவரவும் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் அபுதாபியில் வாழும் அல்ஜாபர் குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப துறையின் மேலாண்மை இயக்குனர் திரு.ஆரிப் மற்றும் தொழில் அதிபர் நாசர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமீரக திமுகவின் நிர்வாகிகள் அன்வர் அலி , பாவை அனீபா, மற்றும் பலர் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories: