×

தலைமறைவு ரவுடிகள் 3 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர், அக்.11: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ராஜன் (60) என்பவரை, கடந்த மாதம் 24ம் தேதி, சரித்திர பதிவேடு ரவுடிகளான கொருக்குப்பேட்டையை சேர்ந்த மாரி மற்றும் செல்வம் ஆகிய இருவர், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே, மாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (28) என்பவரை நேற்று முன்தினம் புளியந்தோப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதேபோல், செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சுதாகர் (36) என்பவரை, கடந்த 5ம் தேதி போதையில் சரமாரியாக தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த வின்சென்ட் (எ) சாமுவேல் (24) என்பவரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். ‌ வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தாஸ் (42) என்பவர் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக சென்றபோது, கத்தியை காட்டி மிரட்டி, 1000 ரூபாயை பறித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வியாசர்பாடி காந்திபுரத்தை சேர்ந்த அஜய் குப்தா (30) என்பவரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

The post தலைமறைவு ரவுடிகள் 3 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rajan ,Pulianthoppu Kanikapuram ,Korukuppettai ,Mari ,Selvam ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428...