×

50 ஆண்டுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை 73% சரிந்து விட்டதாக உலக வன விலங்கு நிதியம் தகவல்!

லண்டன் : 1970ம் ஆண்டு முதல் தற்போது வரை உலகம் முழுவதும் வன விலங்குகளின் எண்ணிக்கை சராசரியாக 73% சரிந்துள்ளதாக WWF எனப்படும் உலக வனவிலங்கு நிதியம் தெரிவித்துள்ளது. லண்டன் விலங்கியல் சங்கம் (ZSL) வெளியிட்ட லிவிங் பிளானட் ரிப்போர்ட்டில், கண்டம் வாரியான தகவலின்படி, அதிகபட்சமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 95% விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் 76%மும் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை 60%மும் சரிந்துள்ளதாக உலக வன விலங்கு நிதியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களின் தலையீடுகள் எதிரொலியாக கடந்த 50 ஆண்டுகளில் 5000த்திற்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்கள், பறவைகள், ஊர்வனங்கள், மீன்கள் மற்றும் தரை – நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவுக்கு குறைந்துவிட்டதாக WWF எச்சரித்துள்ளது.

The post 50 ஆண்டுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை 73% சரிந்து விட்டதாக உலக வன விலங்கு நிதியம் தகவல்! appeared first on Dinakaran.

Tags : World Wildlife Fund ,London ,WWF ,London Zoological Society ,ZSL ,Dinakaran ,
× RELATED 12 ஆண்டுகள் கழித்து அம்மாவான ராதிகா ஆப்தே