×

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் : மகாராஷ்டிரா அரசு அதிரடி

மும்பை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மும்பை நரிமன் பகுதியில் உள்ள தேசிய கலை மையத்தில் இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடாவின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது.மேலும் மாலை 3.30 மணியளவில் அளவில் அவரது உடல் வோர்லி மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

The post பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் : மகாராஷ்டிரா அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Ratan Tata ,Maharashtra Government ,Mumbai ,Dinakaran ,
× RELATED மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை:...