×

தொடர் விடுமுறை காரணமாக் சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம் தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி, போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • சென்னை – மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ.12,026-லிருந்து 18,626 – ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  •  சென்னை – தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626-வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை – கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னை – சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து 10,792-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் விடுமுறை காரணமாக் சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madurai ,Trichy ,Goa ,Salem Thoothukudi ,Tamil Nadu ,Navaratri ,Ayutapuja ,Vijayatasamy ,Chennai Domestic Airport ,
× RELATED சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை...