×

ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

*தடுக்க வலியுறுத்தல்

ஓசூர் : ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஓசூர் வனக்கோட்டம் 1501 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள காப்பு காடுகளில், மாநிலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் வழியாக ஓசூரில் இருந்து ராயக்கோட்டை தர்மபுரிக்கும், தர்மபுரி ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து ஓசூர் பெங்களூருக்கும் வாகனங்கள் சென்று வருகிறது.

அதேபோல், காப்பு காடுகளின் அருகே நகரங்கள், கிராமங்கள் மற்றும் கடைகள் உள்ளது. காப்புகாடுகளையொட்டி சிலர் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் இதர குப்பைகழிவுகளை மூட்டைகளாக கட்டி வீசிசெல்கின்றனர். இதனால் இறைச்சியை தேடி வேட்டை விலங்குகள் வரும் ஆபத்து உள்ளது. மேலும் வன விலங்குகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வனத்துறையினர் சானமாவு காப்புகாட்டுகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க, எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். ஆனாலும், மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வந்து, இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற கழிவுகள் கொட்டுபவர்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Sanamau ,Hosur ,Ozur ,Sanamau Reservoir ,Hosur Forest ,Dinakaran ,
× RELATED கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 400 கனஅடியானது