- வாரணவாசி பஞ்சாயத்து பேருந்து
- வாலாஜாஹாபாத்
- வாரணவாசி
- வாரணவாசி பஞ்சாயத்து
- காஞ்சிபுரம் மாவட்டம்
- வாலாஜாபாத்
- வாரணவாசி பஞ்சாயத்து பேருந்து
வாலாஜாபாத், அக்.10: வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 155 நின்று செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வாரணவாசியை சுற்றிலும் அகரம், தொள்ளாழி, குண்ணவாக்கம், வேண்பாக்கம், ஆம்பாக்கம் காம்மராஜபுரம், அளவூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாரணவாசி வந்து தான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஒரகடம், சுங்குவார்சத்திரம், பெரும்புதூர், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர் புறப்பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அதிகம்.
இதேபோல் மாணவ, மாணவிகள் நாள்தோறும் காஞ்சிபுரம், தாம்பரம், ஒரகடம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்ளிட்ட நகர் பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். இவை மட்டுமின்றி வாரணவாசியை சுற்றி உள்ள பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அதிகம் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலூர், ராணிப்பேட்டை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வாரணவாசிக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வேலூரில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் 155 தடம் எண் கொண்ட அரசு பேருந்து வாலாஜாபாத், வாரணாசி வழியாக தாம்பரம் வரை நாள்தோறும் சென்று வருகின்றன. அப்போது, வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் 155 தடம் எண் கொண்ட பேருந்து மட்டும் நிற்காமல் செல்கின்றன. இதனால், இங்குள்ள மாணவ, மாணவிகளும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களும், அரசு பணிகளுக்கு செல்லும் அரசு அலுவலர்களும் நாள்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘வாரணவாசி ஊராட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், வாரணவாசியை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவ, மாணவிகள் மட்டுமின்றி தொழிலாளர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுழற்சி முறையில் தொழிற்சாலை பணிக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக செல்லும் 155 தடம் எண் கொண்ட தாம்பரம் பேருந்து வாரணாசி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. இதனால், நாள்தோறும் நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ – மாணவிகளும், தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடும் சிரமப்பட்டு வருகிறோம்.
மேலும் இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் அதிகப்படியான தொழிலாளர்கள் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தவர்கள். இவர்கள், தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டும் எனில் இங்கிருந்து வாலாஜாபாத் அல்லது காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து 155 தடம் எண் கொண்ட பேருந்து மூலம் வேலூர் வரை செல்ல வேண்டிய சூழல் நிலவுகின்றது. இதுபோன்ற நிலையில் 155 தடம் எண் கொண்ட அரசு பேருந்து வாரணாசி பேருந்து நிறுத்ததில் நின்று சென்றால் இங்குள்ள மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்’ என்கின்றனர். இது போன்ற நிலையில் வேலூர் பணிமனை சார்ந்த போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காஞ்சிபுரம் பணிமனையை சேர்ந்த போக்குவரத்து அலுவலர்கள் வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் இருந்து எத்தனை பயணிகள் ஏறி செல்கின்றனர் என்பதை ஆய்வு செய்து வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் 155 தடம் எண் கொண்ட பேருந்து நின்று சொல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் அதிகப்படியான தொழிலாளர்கள் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தவர்கள். இவர்கள், தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டும் எனில் இங்கிருந்து வாலாஜாபாத் அல்லது காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து 155 தடம் எண் கொண்ட பேருந்து மூலம் வேலூர் வரை செல்ல வேண்டிய சூழல் நிலவுகின்றது.
வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் 155 தடம் எண் கொண்ட பேருந்து மட்டும் நிற்காமல் செல்கின்றன. இதனால், இங்குள்ள மாணவ, மாணவிகளும், தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களும், அரசு பணிகளுக்கு செல்லும் அரசு அலுவலர்களும் நாள்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மனு அளித்தும் பயனில்லை
வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சி இங்குள்ள பெரும்பாலான மக்கள் நாள்தோறும் தொழிற்சாலைகளில் கூலி வேலைக்காக சென்று வருகின்றனர். மேலும், சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த மாணவ – மாணவிகளும் காஞ்சிபுரம், தாம்பரம் உள்ளிட்ட நகர்பொருள் பகுதிகளில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்கள் அதிகம். இந்நிலையில், இந்த வழியாக செல்லும் 155 தடம் மேற்கொண்ட அரசு பேருந்து நின்று செல்ல வேண்டும் என பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமையில் மனு அளித்தும் இதுவரை போக்குவரத்து துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
The post வாரணவாசி ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 155 நின்று செல்லுமா?: கிராமமக்கள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.