×

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பணிபுரிய 9,36,160 தொழிலாளர்கள் பதிவு

சென்னை: மாநில அளவில் புலம்பெயரும் தொழிலாளர்கள் ஆலோசனை குழு கூட்டம் சென்னையில் நேற்று தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் (8ம் தேதி) வரை தொழிலாளர் துறை இணையதள வெளிமாநில தொழிலாளர்களுக்கான வலைதளத்தில் (https://labour.tn.gov.in/ism) 9,36,160 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இயக்குநர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கே.வி.முரளிதரன், காவல் துறை, (உளவுத்துறை பாதுகாப்பு) மகேஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, இயக்குநர், எஸ்.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பணிபுரிய 9,36,160 தொழிலாளர்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Migrant Workers Consultative Committee ,Labor Commissioner ,Atul Anand ,Labor Department ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...