×

வடகொரியா அனுப்பிய ஆயுதங்கள் நாசம் ரஷ்யாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்தது உக்ரைன்

கீவ்: ரஷ்யாவில் உள்ள முக்கியமான ஆயுதக் கிடங்கு ஒன்றை உக்ரைன் ராணுவம் ஏவிய டிரோன் துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டரை ஆண்டாக நீடிக்கிறது. தற்போது உக்ரைன் ராணுவம், டிரோன், ராக்கெட் மூலம் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா பகுதியில் உள்ள ஆயுத கிடங்குகள் மற்றும் எண்ணெய் கிணறுகளை தகர்த்து வருகிறது. 3 வாரத்திற்கு முன்பு ரஷ்யாவில் உள்ள ஆயுதக்கிடங்கு ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வெடிக்கச் செய்தது.

அதே போல 3 நாட்களுக்கு முன்பு முக்கிய எண்ணெய் சேமிப்பகத்தை தகர்த்தது. இந்நிலையில், ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள முக்கிய ஆயுதக் கிடங்கை குறிவைத்து உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் இரவு டிரோன்களை ஏவியது. இதில் அந்த ஆயுத கிடங்கு முற்றிலும் வெடித்து சிதறியதாகவும், அங்கு வடகொரியா அனுப்பிய ஆயுதங்கள், ஏவுகணைகள், வெடி பொருட்கள் இருந்ததாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. மேலும், 3 உக்ரைன் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஏவிய 22 டிரோன்களில் 21ஐ வானில் இடைமறித்து தகர்த்ததாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

The post வடகொரியா அனுப்பிய ஆயுதங்கள் நாசம் ரஷ்யாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்தது உக்ரைன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ரஷ்யாவின் அடுக்குமாடி குடியிருப்பு...