×

தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை சைதாப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜெய்சங்கர், செங்கல்பட்டு மாவட்டம் (தனியார் பள்ளிகள்) மாவட்டக் கல்வி அலுவலராகவும், வேலூர் மாவட்டம் (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலர் மோகன் சென்னை சைதாப்பேட்டை (தனியார் பள்ளிகள்) மாவட்டக் கல்வி அலுவலராகவும், சென்னை எழும்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சிவசுப்ரமணியம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலராகவும், சென்னை வில்லிவாக்கம் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) முருகன் எழும்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) உட்பட தமிழகம் முழுவதும் 18 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பணியிடத்தில் உடனடியாக சேர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,School Education Department ,CHENNAI ,Department of School Education ,Chennai Saitappettai ,District ,Education Officer ,Jaishankar ,Chengalpattu District ,Vellore District ,Mohan ,Saitappettai ,
× RELATED வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி...