×

சென்னையில் ஈ.வி.ஆர் சாலை பில்சி சந்திப்பு அருகே ‘U’ திருப்பம் இன்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு

சென்னை: ஈ.வி.ஆர் சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டி ஈ.வி.ஆர் சாலை x பிஎல்சி சந்திப்பு அருகில் புதியதாக யு திருப்பம் இன்று (09.10.2024) 15.00 முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

தற்போது ராஜா முத்தையா சாலையிலிருந்து பிஎல்சி சந்திப்பிற்க்கு வரும் வாகனங்கள் பிஎல்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்தி இர்வின் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்படுவதால், ஈவிஆர் சாலையில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் இரண்டும் நிறுத்தப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மேற்கண்ட சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேற்கண்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டி தற்போது பிஎல்சி சிக்னல் அருகே ரிப்பன் மாளிகை எதிரில் புதியாக யு திருப்பம் அமைக்கபெற்று ராஜா முத்தையா சாலையிலிருந்து பிஎல்சி சந்திப்பிற்க்கு வரும் வாகனங்கள் பிஎல்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் மேற்கண்ட புதியதாக அமைக்கப்பட்ட யு திருப்பத்தில் அனுமதிக்கப்பட்டு காந்தி இர்வின் சாலை சந்திப்பு நோக்கி செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்தினால் வாகனங்கள் ஈ.வி.ஆர் சாலை x பிஎஸ்சி சந்திப்பில் காத்திருப்பது குறைக்கப்படுவதுடன் போக்குவரத்தும் தங்குதடையின்றி செல்லும். மேற்கண்ட போக்குவரத்து மாற்றமானது 09.10.2024 முதல் அமலுக்குவரும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

The post சென்னையில் ஈ.வி.ஆர் சாலை பில்சி சந்திப்பு அருகே ‘U’ திருப்பம் இன்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EVR Road Pilsi junction ,Chennai ,EVR Road ,PLC Junction ,Raja Muttiah Road ,EVR Road PLC junction ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!