×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் ராணுவ வீரரை கடத்தி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்!!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் ராணுவ வீரரை கடத்தி தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிராந்திய ராணுவத்தின் 161வது பிரிவைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் இரண்டு குண்டு காயங்களுக்குப் பிறகும் தப்பித்து வந்துவிட்டார். காயமடைந்த வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை சீராக உள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றோரு ராணுவ வீரரை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. இச்சூழலில் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் இருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் டிஏ வீரரின் உடல் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டது. அனந்த்நாக்கின் முக்தாம்போரா நவ்காமின் ஹிலால் அகமது பட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆகஸ்ட் மாதம் அனந்த்நாகில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் ராணுவ வீரரை கடத்தி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Anantnag ,Srinagar ,Anantnag, Jammu and Kashmir ,Jammu and Kashmir police ,Kashmir ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...