×

ஹரியானாவில் வரலாறு படைத்த பாஜக.. அக்.12ம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் நயாப் சிங் சைனி!!

ஹரியானா: ஹரியானா முதல்வராக வரும் 12ம் தேதி நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார். ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து, அக்டோபர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஹரியானாவில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி இறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளியான நிலையில் அவற்றை பொய்யாக்கி பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி நேற்று இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்க பதிவில்; தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். அவர் என்னை திலகமிட்டு வாழ்த்தினார். தாயின் அன்பு, ஆசிர்வாதம் தான் வாழ்க்கைக்கு அமுதம், என சைனி கூறியுள்ளார்.

ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பளித்தற்காக லாட்வா தொகுதி மக்களுக்கும், ஹரியானாவில் உள்ள மக்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் “அரசியல் என்பது எங்களுக்கு ஒரு சேவை ஊடகம் மட்டுமே. ஹரியானா மக்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன், எப்போதும் போல், மக்கள் சேவையில் மக்களின் சேவகனாக இருப்பேன். மக்களின் நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம். எங்கள் ஹரியானாவை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியடையச் செய்ய எப்போதும் உறுதியோடு பாடுபடுவோம்” என்று அவர் கூறினார்.

இதையடுத்து, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஹரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்று 3வது முறையாக அரியணை ஏறுகிறது. கருத்துக்கணிப்புகளை புறம்தள்ளி பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி வரும் 12ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது. மாநில தலைவர் மோகன்லால் படோலியுடன் டில்லி வந்துள்ள சைனி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் வரும் 12ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.

The post ஹரியானாவில் வரலாறு படைத்த பாஜக.. அக்.12ம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் நயாப் சிங் சைனி!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Haryana ,Nayab Singh Saini ,Chief Minister ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்பில் முன்னுதாரணமாக...