×

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

 

ஈரோடு, அக். 9: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சம்பத் சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராகவும், சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் சுப்பாராவ் ஈரோடு முதன்மை கல்வி அலுவலராக பணியிடம் மாற்றம் செய்து, தமிழக அரசின் செயலாளர் மதுமதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சுப்பாராவ் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, புதிதாக பொறுப்பேற்று கொண்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவை, முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

 

The post ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Sampath ,Erode District ,Deputy Director ,Chennai Directorate of Primary Education ,Subbarao ,Principal Education ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு