- மகாராஷ்டிரா
- மும்பை
- அஜித் பவார்
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- பாஜக
- சிவசேனா
- துணை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பாராமதி
மும்பை: அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜ மற்றும் சிவசேனா கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. துணை முதல்வரான அஜித்பவார் தற்போது பாராமதி தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கிறார். ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் பிரபுல் படேல், அஜித்பவார் தனது சொந்த தொகுதியான பாராமதியிலேயே போட்டியிடுவார் என அறிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படும். கூட்டணி கட்சிகளான பாஜவும் சிவசேனாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் மொத்தம் 230 தொகுதிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் நிலவும் கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும். அரியானா தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இது மகாராஷ்டிர தேர்தலுக்கும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் 230 தொகுதிகளில் தொகுதி பங்கீடு நிறைவு appeared first on Dinakaran.