×

காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே மூட வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

சென்னை: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கொடி ஏற்று விழா நேற்று நடந்தது. மாநில தலைவர் விக்ரமராஜா சிறப்புரையாற்றினார்.பின்னர், அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் டோல்கேட்களில் ஒருமுனை வரியாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், காலாவதியான டோல்கேட்டுகளை உடனே மூட வேண்டும் என்றார். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே மூட வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,CHENNAI ,Federation of Tamil Nadu Merchants Associations' ,Pudupatnam ,Chaturangapatnam ,Venkappakkam ,Kalpakkam ,State President ,Tamil Nadu ,India ,
× RELATED 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற...