- டிரம்ப்
- கமலா ஹாரிஸ்
- வாஷிங்டன்
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
- ஹெலன் சூறாவளி
- வால்டோசா, ஜார்ஜியா
- அதிபர் டிரம்ப்
- ஜனாதிபதி ஜோ பிடென்
வாஷிங்டன்: ஹெலன் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு அரசு சரியான நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்று அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜார்ஜியாவின் வால்டோசாவில் கடந்த வாரம் பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் ஜோ பைடன் தூங்கிக்கொண்டு இருக்கிறார். ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்பின் அழைப்பை அவர் ஏற்று பதிலளிக்கவில்லை என்று கூறியிருந்தார். பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேண்டுமென்றே உதவிகளை நிறுத்துவதாகவும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த பேச்சுக்கு துணை அதிபர் கமலா ஹாரீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டிரம்ப் ஹெலன் புயல் குறித்து தவறான தகவல்களை பரப்பிப்கொண்டு இருக்கிறார். இது அசாதாரணமான பொறுப்பற்ற தன்மையாகும் என்று கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.
The post புயல் குறித்து தவறான தகவல் பொறுப்பே இல்லாதவர் டிரம்ப்: கமலா ஹாரீஸ் விமர்சனம் appeared first on Dinakaran.