×

46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவை கூட்டம் தொடர்பாக நேற்று வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத் தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில், 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பதிவில் கூறியுள்ளார்.

The post 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க...