அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு

துபாய்: யுஏஇ தலைநகர் அபுதாபி கலீஃபா பூங்காவில்  'அமீரகத் தமிழ் மக்கள் மன்றம்' மற்றும் 'அமீரகத் தமிழகம்'  அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் தமிழர் திருவிழா கொண்டாட்டங்களை நடத்தினர். நிகழ்ச்சியில் தமிழ் பண்பாடு சார்ந்த பல்பேறு நிகழ்வுகளும் பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கென வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. பெரும் குடும்ப விழாவாக உருவாக்கப்பட்ட இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக புதுவை மாநிலத்தின் முதல்வர்  நாராயணசாமி  கலந்து கொண்டு நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தனது பொங்கல்  வாழ்த்துக்களைத்  தெரிவித்து  சிறப்புரையாற்றினார்.

Advertising
Advertising

இந்நிகழ்வில் இந்திய அரசின் தூதரக அதிகாரிகளும் மற்றும் முஸாஃபாவில் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையான அனி ஸேவியர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் சிறுபான்மை துறையின் முதன்மை மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் நௌஷாத் மற்றும் காரைக்கால் காங்கிரஸ் கமிட்டி அமைப்பாளர் சௌதா சின்னத்தம்பி அவர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த 'அமீரகத் தமிழகம்' அமைப்பின் மருத்துவர்  ரவிச்சந்திரன்  மற்றும்  அமீரகத் தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் திரு சிவக்குமார் ஆகியோர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார்கள். இந்த நிகழ்ச்சியை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பிர்தோஸ் பாஷா பொது செயலாளர்.அமீரக தமிழ் மக்கள் மன்றம்,அபுதாபி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.

Related Stories: