×
Saravana Stores

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

டெல்லி: நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான முன்னோடி திட்டமான சந்திரயான் 5 திட்டத்துக்கு தேசிய விண்வெளி ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா-ஜப்பான் இணைந்து திட்டத்தை தயாரிக்க உள்ளனர். சந்திரயான் -5 திட்டத்துக்கு நிலவு துருவ ஆய்வு திட்டம்(லூபெக்ஸ்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் ரோவரையும், இஸ்ரோ லேண்டரையும் தயாரிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் -5 திட்டத்தில் அதிகசக்தி வாய்ந்த, அதிக எடை கொண்ட லேண்டரை, ரோவரை பயன்படுத்த உள்ளோம். நிலவில் தண்ணீர் உள்ளதா, நிலவில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பது குறித்து லூபெக்ஸ் திட்டம் மூலம் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Delhi ,National Space Commission ,Moon ,India ,Japan ,
× RELATED பட்டாசு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?: டெல்லி ஐகோர்ட் கேள்வி