×

அயிலாப்பேட்டையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

 

ஜீயபுரம், அக்.8: அயிலாப்பேட்டை பள்ளியில் 168 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டிகளை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார். அயிலாப்பேட்டைபள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் ஒன்றியக்குழு உறுப்பினர் வளர்மதி சிவசூரியன் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 168பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

தகவல் தொழில்நுட்ப அணி லெட்சுமணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிவண்ணன், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதுகலை வேதியியல் ஆசிரியர் கோபி அனைவரையும் வரவேற்றார். முடிவில் உதவி தலைமையாசிரியர் ரெத்தினகிரி நன்றி கூறினார். இதேபோன்று திருச்செந்துறை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

The post அயிலாப்பேட்டையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி appeared first on Dinakaran.

Tags : Ailapettai ,Jiyapuram ,Srirangam ,MLA Palaniandhi ,Tamil Nadu government ,Ayalapet ,Headmaster ,Tamilchelvan ,Ailapettaipalli ,Panchayat Council ,Chandrasekhar Union Committee ,Varamathi ,
× RELATED ஜீயபுரம் போலீசில் சீமான் மீது புகார்