×

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையினை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார். கைத்தறி தொழிலினை ஊக்குவிக்கும் வகையில், நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன், ஒருபகுதியாக நெசவாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயில வேண்டும் என உயரிய நோக்கத்திற்காக டாக்டர் எம்ஜிஆர் கைத்தறி நெசவாளர் அறக்கட்டளையின் கீழ், 10வது முதல் உயர்கல்வி வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023-2024ம் ஆண்டிற்கு காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள 52 கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,79,500க்கான தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை, சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், தனது தொகுதி அலுவலகத்தில் மாணவ – மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் காஞ்சிபுரம் கைத்தறித்துறை துணை இயக்குநர் மணிமுத்து, திமுக நிர்வாகிகள் வெங்கடேசன், பாலன் பி.எம்.நீலகண்டன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Ehilarasan ,Kanchipuram ,Government of Tamil Nadu ,
× RELATED விசா கிராமத்தின் அருகில் பாலாற்றில்...