×

காலாண்டு விடுமுறை முடிந்து 37,000 பள்ளிகள் திறக்கப்பட்டன

சென்னை: தமிழகத்தில் காலாண்டு தேர்வுகள் கடந்த மாதம் 27ம் தேதி வரை நடந்தது. அதற்கு பிறகு அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த விடுமுறையில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் அறிவுரைப்படி, தூய்மைப்பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று வழக்கம் போல 37 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும் 90 லட்சம் மாணவ மாணவியர் நேற்று பள்ளிக்கு வருகை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த மாணவ மாணவியருக்கு 2ம் பருவப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்ட விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட்டன.

The post காலாண்டு விடுமுறை முடிந்து 37,000 பள்ளிகள் திறக்கப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Education Minister ,Anbilmakesh Poiyamozhi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் சாலைகளில் சுற்றித்...