×

வளைகுடாவில் இருந்து 43,000 மெட்ரிக் டன் உரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவத்தில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் பரப்பில் மக்காச்சோளம், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள், மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவை பயிரிடப்படுகிறது. அடி உரத் தேவைக்குப் பயன்படும் டி.ஏ.பி உரத்தை போதிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்க விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். இதற்காக வளைகுடா நாட்டில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 43 ஆயிரம் மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் வந்து சேர்ந்து உள்ளது. இந்த தகவலை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post வளைகுடாவில் இருந்து 43,000 மெட்ரிக் டன் உரம் appeared first on Dinakaran.

Tags : Gulf ,Tuticorin ,Tuticorin district ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி ஆற்றுக் கரையோரம் வசிக்கும்...