×

மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரின் காக்சிங் மற்றும் தவுபால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின்போாது ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கடந்த 5ம் தேதி காக்சிங் மாவட்டத்தின் வபாகாய் நடேகாங் டுரென்மெய் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 கார்பைன்கள், ஒரு ரைபிள், பிஸ்டல், துப்பாக்கி குண்டுகள், 14 கையெறி குண்டுகள், மார்டர் ரக குண்டுகள், இரண்டு எம்கே-3 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தவுபால் மாவட்டத்தில் 4 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

The post மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Goxing ,Taupal ,Wabakai Nategang Durenmei ,Kaksing district ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு