×

துர்கா பூஜையையொட்டி மோடி எழுதிய கர்பா பாடல் வௌியீடு

புதுடெல்லி: துர்கா பூஜையையொட்டி பிரதமர் மோடி தான் எழுதிய கர்பா பாடலை வௌியிட்டுள்ளார். வட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், கர்பா என்னும் குஜராத்தி நடனம் மிக பிரபலமாகும். இந்த பண்டிகையையொட்டி பிரதமர் மோடி துர்கா தேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தான் எழுதிய கர்பா பாடலை நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இது தொடர்பாக அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிடுகையில்,இது நவராத்திரியின் புனிதமான நேரம். மக்கள் அன்னை துர்கா மீதான பக்தியால் ஒன்றுபட்டு வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள். இந்தப் பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும், அவரது சக்தி மற்றும் கருணைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நான் எழுதிய ஒரு கர்பா பாடலை கேளுங்கள். அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post துர்கா பூஜையையொட்டி மோடி எழுதிய கர்பா பாடல் வௌியீடு appeared first on Dinakaran.

Tags : Modi ,Durga Puja ,New Delhi ,Navratri festival ,northern ,Durga ,
× RELATED மோடியுடன் உரையாட ஜன.14 வரை முன்பதிவு