×

சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரர் தற்கொலை: உறவினர்கள் மறியல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (32). அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2ம் தேதி, சின்னப்பள்ளம் போலீஸ் சோதனைச்சாவடியில் இரவு பணியில் இருந்தபோது, மினி வேனில் வாழைக்காய் பாரம் ஏற்றிச்சென்ற, டிரைவர் பிரபுவிடம் (25) குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது‌. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, 4 நாட்களுக்கு முன்பு, செல்வக்குமாரை சஸ்பெண்ட் செய்து, எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டார். இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த செல்வக்குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் அம்மாபேட்டை மேட்டூர், பவானி ரோடு பிரிவில் அமர்ந்து நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரர் தற்கொலை: உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Selvakumar ,Umarettiur ,Ammapet, Erode district ,Ammapet ,Chinnapallam ,
× RELATED ஆண் சடலம் மீட்பு