×

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

 

ஈரோடு, அக். 8: ஈரோடு கோணவாய்க்கால் மோகன் தோட்டம் பகுதியில் ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் மூதாட்டி ஒருவரது சடலம் மிதப்பதாக தெற்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், இறந்த மூதாட்டி ஈரோடு கருங்கல்பாளையம் கமலாநகர் 4வது வீதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ரங்கம்மாள் (69) என்பதும், வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,South Police ,Kalingarayan canal ,Mohan Garden ,Erode Kona canal ,Dinakaran ,
× RELATED ஆண் சடலம் மீட்பு