இந்தியா-யுஏஇ முதலீட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே, கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2000-ம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை சுமார் 19 பில்லியன் டாலர் ஒட்டு மொத்த முதலீட்டுடன், இந்தியாவில் பெறப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 3% பங்கைக் கொண்ட ஏழாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம்(யுஏஇ) ஆகும். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை யுஏஇயில் 15.26 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் இந்தியா 5 சதவீதத்தை செய்துள்ளது.

இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஒப்பந்தம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்தியஸ்தம் மூலம் தகராறு தீர்வுக்கான ஒரு சுதந்திரமான மன்றத்தை வழங்குகிறது. முதலீட்டாளர் மற்றும் முதலீட்டு பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையைப் பொறுத்தவரை சமநிலை பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் போதுமான கொள்கை இடத்தை அது வழங்குகிறது. 2013-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துடன் கையெழுத்திடப்பட்ட முந்தைய இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் காலாவதியாகியதால் கடந்த பிப்ரவரி 13ல் கையெழுத்தான புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளது.

 

The post இந்தியா-யுஏஇ முதலீட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: