×

காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 640 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன முறையில் கைத்தொலைபேசி மற்றும் பிற மின்னணு சாதனங்களை மூடிமறைக்கும் முன்-கவர் கண்ணாடி தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், நாட்டிலேயே முதன் முறையாக தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். இந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தற்போது ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒப்புதலுக்காக மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் அனுப்புவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆலை அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

The post காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Environmental Impact Assessment Commission ,Kanjipura ,Kanchipuram ,Kancheepuram ,Bharat Innovative Glass Technologies Institute ,Kancheepuram District ,Chipkot Pillappakkam ,Workerbunga ,
× RELATED கோவை சூலூர் அருகே அமையவுள்ள ராணுவ...