×

உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை

டேராடூன்: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரூர்கியில் உள்ள நெய் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆந்திராவில் இருந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உத்தராகண்ட் மாநில அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினர். திருப்பதி லட்டு தயாரிக்க உத்தராகண்ட் நெய் நிறுவனம் 70,000 கிலோ நெய் விநியோகம் செய்துள்ளது. திருப்பதி கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலப்பு என சர்ச்சை எழுந்தது.

The post உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Ghee Institute ,Dehradun ,Ghee Manufacturing Company ,Uttarakhand ,Tirupathi Latu ,Food Safety Department ,Ghee Institute ,Rourke ,Andhra, ,
× RELATED ஆண்டிறுதியில் விமானத்தில் பயணிக்க...