×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் சவாரிக்கு தடை

பென்னாகரம்: தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால் விடுமுறை தினமான நேற்று வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8,268 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 12,713 கனஅடியாக அதிகரித்து. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 92.84 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 92.60 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 55.67 டிஎம்சியாக உள்ளது.

 

The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் சவாரிக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Bennagaram ,Tamil Nadu ,Cauvery ,Okenakal Cauvery ,Okanagan Kaveri River ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி