×

உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

கூடுவாஞ்சேரி: உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வண்டலூரில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமினை கலெக்டர் தொடங்கி வைத்தார். உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி முகாம் நேற்று நடைபெற்றது.

இதில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மருத்துவமனையில் உள்ள சிகிச்சை பகுதிகளிலும் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பு ஊசிகளை குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 70க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன், கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்ரீவித்யா, சீனிவாசன், வினோதினி, விக்னேஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post உலக வெறி நோய் தினத்தையொட்டி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : World Manic Disease Day ,Vandalur ,World Rabies Day ,Chengalpattu district ,World Rabies Day Vaccination Camp ,Pets ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி கூட்டம்